தெலுங்கு நடிகர் கிரண் அப்பாவரம் தன்னால் ‘மார்கோ’ படத்தினை பார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
‘மார்கோ’ படம் குறித்து கிரண் அப்பாவரம், “‘மார்கோ’ படத்தின் அதிகப்படியான வன்முறை காரணமாக எனது மனைவியால் பார்க்க முடியவில்லை. நானும் முழுமையாக படத்தைப் பார்த்து முடிக்க முடியவில்லை. ஆகையால் படம் முடிவதற்குள் வெளியேறிவிட்டோம். எனது மனைவி கர்ப்பமாக இருப்பதால், அப்படத்தின் வன்முறையை ஜீரணிக்க அவருக்கு கடினமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். இக்கருத்துக்கு இணையத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.