போர்ட்பிளேர்: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அனைவரும் செல்வதற்கு தடைசெய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவில் பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்குள் கடந்த மார்ச் 31 அன்று அமெரிக்க வாலிபர் மைக்கைலோ விக்டோரோவிச் பாலியாகோவ் (24), எந்த அனுமதியும் இல்லாமல் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மார்ச் 26 அன்று போர்ட் பிளேருக்கு வந்து குர்மா தேரா கடற்கரையிலிருந்து வடக்கு சென்டினல் தீவுக்கு சென்றார். அங்கு மணல் மாதிரிகளை சேகரித்தார். பின்னர் தனது படகில் திரும்புவதற்கு முன்பு ஒரு வீடியோ பதிவு செய்தார்.
அதை தொடர்ந்து இரவு 7 மணியளவில் குர்மா தேரா கடற்கரையை அடைந்தார். அவரைப்பார்த்த மீனவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்ததால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தனது பயணம் முழுவதும் ஜிபிஎஸ் பயன்படுத்தி உள்ளது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்ட தகவல், வெளியுறவு அமைச்சகம் மற்றும் அமெரிக்க தூதரகத்திற்கும், உள்துறை வழியாக தெரிவிக்கப்பட்டது.
The post அந்தமான் பழங்குடியினர் பகுதிக்குள் அத்துமீறிய அமெரிக்க வாலிபர் அதிரடி கைது appeared first on Dinakaran.