புதுடெல்லி: சில அரசியல் தலைவர்கள் அந்நிய சக்திகளோடு கைகோத்து நாட்டை பலவீனப்படுத்த முயற்சி செய்கின்றனர். இந்து மதத்தையும் மகா கும்பமேளா உள்ளிட்ட இந்து பண்டிகைகளையும் விமர்சிக்கின்றனர். சமுதாயத்தில் பிரிவினையை தூண்ட முயற்சி செய்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம், கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் அமைந்துள்ளது. இந்த கோயில் அறக்கட்டளை சார்பில் கர்ஹாவில் ரூ.218 கோடி செலவில் 25 ஏக்கர் பரப்பளவில் புற்றுநோய் மருத்துவமனை கட்டப்படுகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது: