
அனுமனை அவமதிக்கும் வகையில் பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்தப் படத்துக்காக ‘குளோப் டிரோட்டர்’ என்ற சாகச உலகத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இதற்கான விழாவை ஹைதராபாத்தில் கடந்த நவ.15 அன்று ஏற்பாடு செய்தது படக்குழு. இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு வெளியிட்டது.

