சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது. மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமான ஒன்றிய அரசின் கல்வி நிலைப்பாட்டிற்கு பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் ஆதராவாகவே இருக்கின்றனர்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசின் எந்த அதிகார பூர்வமான அறிவிப்பும் வராத நிலையில், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையும் என்று கூறுவது உண்மை நிலைக்கு எதிரானது. எனவே, வருகிற மார்ச் 5ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமாகா பங்கேற்காது: ஜி.கே.வாசன் அறிவிப்பு appeared first on Dinakaran.