வாஷிங்டன்: அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு கடத்தலுக்கான ஏஜெண்டுகள் சுமார் ரூ.45 கோடி ஏமாற்றி வசூலித்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியில் ட்ரம்ப் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை சுமார் 400 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். இந்தியா திரும்பியவர்களிடம் பஞ்சாப் மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக்குழு மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முறையான ஆவணங்கள் இல்லாமல் ஏஜெண்டுகள் மூலம் பிற நாடுகளுக்கு பயணிப்பதே Dunki என அழைக்கபடுகிறது. சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தங்களை அனுப்பிவைத்தவர்கள் குறித்து புகார் அளிக்க பலர் தயங்குவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். வெகு சிலரிடமே பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள 19 வழக்குகளில் 36 ஏஜெண்டுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. Dunki ஏஜெண்டுகள் சட்ட பூர்வமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் உறுதி அளித்து ஒவ்வொருவரிடமும் இருந்து ரூ.45 லட்சம் வரை பெறுகின்றனர்.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் வரையிலான காலத்தில் குடும்பத்தினரிடம் இருந்து பணத்தை வசூலிக்கின்றனர். ஒரு வேலை குடும்பத்தினர் பணத்தை கொடுக்க தாமதம் செய்தால் பாதியிலேயே தடுத்து நிறுத்திவிடுவோம் என மிரட்டுகிறார்கள். இதற்காகவே நிலங்கள், வீடுகள், நகைகளை விற்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்வதற்கான Dunki பயணம் 32 நாடுகள் வழியாக 3 மாதங்கள் முதல் ஓராண்டுவரை நீடிக்கிறது.
இவ்வளவு தொலைவு பயணிக்க முடியாமல் பத்தியில் திரும்பி பணத்தை இழந்தவர்களும் இருக்கின்றனர். சுமார் ரூ.45 லட்சம் வரை கொடுத்து சட்டவிரோத வழிகளில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவோ, ஓட்டுனர்களாகவோ அல்லது ஏதேனும் வழக்குகளில் தொடர்புள்ளவர்களாகவோ இருக்கிறார்கள். இப்படி பட்டவர்களிடம் இருந்து இதுவரை ஒட்டுமொத்தமாக 44 கொடியே 70 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் மணிலா அரசு தெரிவித்துள்ளது.
The post அப்பாவிகளை அமெரிக்காவுக்கு Dunki வழியில் அனுப்பும் ஏஜெண்டுகள்: கூடுதல் பணம் கேட்டு குடும்பத்தினரை மிரட்டியதும் அம்பலம் appeared first on Dinakaran.