சென்னை: “அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, டாஸ்மாக் நிறுவனத்தில் எவ்வித தவறுகளும் நடைபெறவில்லை. எனவே, இதை டாஸ்மாக் நிறுவனம், தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்,” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை விளக்கும் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழக அரசு மக்களின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதைப் பொறுத்துக் கொள்ளமுடியாது மத்திய அரசு, அமலாக்கத் துறையை ஏவி, டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.