புதுடெல்லி: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோயிலில் நடந்த நாசவேலைக்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய செயல்கள் மிகவும் வெறுக்கத்தக்கவை என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், உள்ளூர் நிர்வாகத்தினர் வழிபாட்டுத்தளங்களுக்கு உரிய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலுள்ள சினோ ஹில்ஸில் இருக்கும் இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்து ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள இந்து கோயில் சேதப்படுத்தப்பட்டது குறித்த செய்திகளை நாங்களும் பார்த்தோம். இந்த இழிவான செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.