டெஹ்ரான்: அமெரிக்க போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
ஈரானிடம் 10-க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் தயாரிக்க தேவையான யுரேனியம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஈரானிடம் உள்ள யுரேனியம் தற்போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. யுரேனியத்தை சுமார் 90 சதவீதம் அளவுக்கு செறிவூட்டினால் அணுகுண்டுகளை தயாரிக்க முடியும்.