வாஷிங்டன்: அமெரிக்காவின் தென் எல்லைப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். டிரம்புக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்காவின் அதிபராக 2-வது முறையாக டிரம்ப் பதவியேற்றார். டிரம்ப் பதவியேற்ற பின்னர் பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. 78-வது வயதில் 2-வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.
வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. டிரம்ப் பதவியேற்புக்கு முன்னதாக அமெரிக்க துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் பேசிய டொனால்ட் டிரம்ப்; அமெரிக்க மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஜோ பைடன் நிர்வாகம் வழங்க தவறி விட்டது. பைடனால் எல்லை பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை. அமெரிக்காவை சிறந்ததாக்க மீண்டும் நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இன்று முதல் உலகம் முழுவதும் மதிக்கப்படும் நாடாக அமெரிக்கா மாறும்.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அமெரிக்காவை முதலிடத்துக்கு கொண்டு வருவதே இலக்கு. அமெரிக்கா இதுவரை இல்லாத வகையில் வளர்ச்சியடைந்த நாடாக மாறும். இன்று முதல் பல மாற்றங்கள் நாட்டில் அமலுக்கு வர உள்ளன. அமெரிக்காவின் தென் எல்லைப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
The post அமெரிக்காவின் தென் எல்லைப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.