வாஷிங்டன்: அமெரிக்காவின் வரிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமெரிக்காவும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் வரி கொள்கையில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறோம். இது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது! இந்த மாற்றம் வேகமாக முன்னேறி வருகிறது," என்று தெரிவித்துள்ளார்.