சிங்கப்பூர்: இந்தியாவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ரமேஷ்(73). ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூர் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பாலசுப்பிரமணியன் பயணம் செய்தார். 14 மணி நேர விமான பயணத்தின் போது விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்துள்ளார். விமானம் சிங்கப்பூரில் வந்து இறங்கியதும் விமான மேற்பார்வையாளர் விமான நிறுவன கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதை தொடர்ந்து பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது 4 பெண்களிடம் சில்மிஷம் செய்ததை அவர் ஒப்பு கொண்டார். இதையடுத்து அவருக்கு ஒரு வருடம் 6 மாத சிறை தண்டனை அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பு துணை வழக்கறிஞர் அஷ்லி சின் கோரினார். குற்றவாளி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேஸ்வானா பெய்ரூஸ் குறைவான தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முதியவருக்கு 9 மாத சிறை தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளித்தார்.
The post அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றபோது விமானப் பணிப்பெண்களிடம் சில்மிஷம்: 73 வயது இந்தியருக்கு 9 மாதம் சிறை appeared first on Dinakaran.