அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான நேரம் ஒதுக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் உள்ள மாணவர்கள் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்காவில் உயர் கல்வி பயிலும் வாய்ப்பு தடைபட்டால் வேறெந்த நாடுகளில் படிக்கலாம்?