புதுடெல்லி: குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள டிங்குச்சா கிராமத்தில் வசித்து வந்த குடும்பத்தை சேர்ந்த நான்கு இந்தியர்களின் உடல் கனடா எல்லையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, குஜராத் அகமதாபாத் போலீஸார் நடத்திய விசாரணையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்வி நிறுவனத்தின் முதல்வர் பவேஷ் அசோக்பாய் படேல் மீது வழக்குப் பதிவு செய்தனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற விரும்பும் இந்தியர்களிடம் பவேஷ் ரூ.60 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு கனடா கல்லூரியில் சேர்க்கை பெறுவதற்காக மாணவர் விசாவை வாங்கி கொடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.