நியூயார்க்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பது பற்றி ஈரான் ராணுவம் முடிவு செய்யும் அந்நாட்டு தூதர் அறிவித்துள்ளார். ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்க ராணுவம் குண்டு வீசியதை கண்டித்து நியூயார்க்கில் ஞாயிறன்று நடந்த ஐநா பாதுகாப்பு மன்ற அவசரக் கூட்டத்தில் ஈரானிய தூதர் அமீர் சயித் பேசியுள்ளார். அமெரிக்காவுக்கு எப்போது எந்தமுறையில் எந்த அளவுக்கு பதிலடி கொடுப்பது என ஈரான் ராணுவம் முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
The post அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பது பற்றி ஈரான் ராணுவம் முடிவு செய்யும்: ஈரான் தூதர் அறிவிப்பு appeared first on Dinakaran.