இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியாவின் பாரம்பரிய வெளியுறவுக் கொள்கை மற்றும் ராஜதந்திரத் திட்டங்களில் ஒரு முக்கிய மாற்றம் தெரிகிறது. இந்த முறை இந்தியா தாக்குதல் நடத்திய விதம், இந்தியா பயன்படுத்தும் உத்திகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பயன்படுத்தும் உத்திகளை, இந்த முறை இந்தியாவும் பயன்படுத்தியுள்ளது’, என்கிறார்கள் நிபுணர்கள்.