புதுடெல்லி: "ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கை அமெரிக்காவின் வரி உயர்வு பாதிப்பை குறைக்க உதவும்" என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தற்போது ஜிஎஸ்டியில் மிகப் பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சீர்திருத் தம் குறித்து மத்திய நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜிஎஸ்டி குறைப்பு, நாட்டில் நுகர்வு அதிகரிக்க உதவும். இதன் மூலம் இந்த நிதியாண்டின் இறுதியில் எந்த பாதிப்பும் இருக்காது. தற்போது எனது கவனம் முழுவதும் வரி குறைப்பு மாற்றத்துக்கு மாறுவதை உறுதி செய்வதில்தான் இருக்கும். அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பை இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறைக்கும்.