அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக, அந்நாட்டு பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக யுத்தத்தை வலுப்படுத்தியுள்ளது. அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவுக்கு பல்வேறு பாதகங்கள் இருந்தாலும் கூட, ஜவுளித் துறையில் பெரும் பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
உலகம் முழுவதும் சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டார்.
ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு முடிவு உலக நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து பல்வேறு நாடுகளின் வர்த்தக அமைச்சகங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.