அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரை போலீஸார் வெளியிடவில்லை.
இது இனவெறி நோக்குடன் தூண்டப்பட்ட வெறுப்புணர்வுக் குற்றமாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டை “வன்முறையான பயங்கரவாத செயல்” என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ அழைக்கிறது.
இந்த சம்பவத்திற்கு காரணமாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் சனிக்கிழமை பிற்பகல் சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்தார். இந்த தாக்குதலை அவர் இணையத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய ஒரு கேமராவை பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.