சென்னை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. திங்கட்கிழமை (பிப்.3) காலை வர்த்தகம் தொடங்கியதும் 67 பைசா சரிந்து ரூ.87.29 என இந்திய ரூபாய் வீழ்ச்சி கண்டது.
கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிக வரி விதித்துள்ளது சர்வதேச அளவில் வணிகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு 25 சதவீதமும், சீன பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.