வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளரான இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல், அங்குள்ள புலனாய்வு அமைப்பின் இயக்குநராக(எப்பிஐ) நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு குடியரசுக் கட்சியின் மேலவை உறுப்பினர்கள் 2 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 51 – 49 என்ற கணக்கில் காஷ் படேல் நியமனம் உறுதி செய்யப்பட்டது. இதுபற்றி காஷ் படேல் தனது எக்ஸ் பதிவில்,’ அமெரிக்கர்களுக்கு தீங்கிழைப்பவர்கள் இந்த பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நாங்கள் உங்களை வேட்டையாடுவோம் ’ என்று தெரிவித்துள்ளார்.
The post அமெரிக்க புலனாய்வுதுறை இயக்குனராக இந்திய வம்சாவளி காஷ் படேல் நியமனம் appeared first on Dinakaran.