வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவதற்கும், வெளிப்படையாக பணியாற்றுவதற்கும் முந்தைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக ஜனவரியில் டிரம்ப் பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். இதன் அடிப்படையில் ராணுவத்தில் இருக்கும் திருநங்கை சேவை உறுப்பினர்கள் வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் இது குறித்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் செவ்வாயன்று ராணுவத்தில் திருநங்கைகளுக்கான தடையை செயல்படுத்துவதற்கு அதிபருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக ராணுவத்தில் இருந்து திருநங்கை சேவை உறுப்பினர்கள் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் டிரம்ப் நிர்வாகம் அனுமதித்ததால் பாதுகாப்பு துறை தங்களது பாலினத்தை வெளிப்படுத்த முன்வராத மற்றவர்களை அடையாளம் காண்பதற்கான மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றவர்களுக்கு சுய அடையாளம் காண்பதற்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
The post அமெரிக்க ராணுவத்தில் இருந்து சுமார் 1000 திருநங்கைகள் வெளியேற்றம் appeared first on Dinakaran.