வாஷிங்டன்: அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வைத்திருந்தது, சீன அதிகாரிகளை சந்தித்தது ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
64 வயதான ஆஷ்லே டெல்லிஸ். மும்பையில் பிறந்தவர். இந்திய வம்சாவளியான அவர் அமெரிக்க ஆய்வாளர் மற்றும் வெளியுறவுக் கொள்கையின் ஆலோசகராக உள்ளார். அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் ஆஷ்லே டெல்லிஸ் (64). முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பதவிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றி உள்ளார்.