வாஷிங்டன்: அமெரிக்க விமான விபத்தில் இந்திய பெண் மருத்துவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாய் சைனி. பெண் மருத்துவரான இவர் அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டை சேர்ந்த மைக்கேல் குரோபை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதிக்கு கரீனா, ஜார்ட், அனிதா ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.
வார விடுமுறையை கொண்டாட மைக்கேல் குரோப் குடும்பத்தினர், நியூயார்க் மாகாணம், வெஸ்ட்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டனர். ஜார்ஜியா மாகாணம், கொலம்பியா பகுதிக்கு சென்ற அந்த விமானத்தில் மைக்கேல் குரோப், அவரது மனைவி ஜாய் சைனி, மகள் கரீனா, அவரது நண்பர் ஜேம்ஸ், மகன் ஜார்ட் ஆகியோர் பயணம் செய்தனர்.