சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கே.ஆர்.பெரியகருப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது பட்டமங்கலம் என்னும் இடத்தில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்ட 8 பேர் மீது, திருக்கோஷ்டியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவகங்கை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.