மதுரை: குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்ட நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன். தஞ்சாவூர் மாவட்டம் ராஜாங்கநல்லூரைச் சேர்ந்தவர். இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கடந்தாண்டு செப். 9-ல் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் சரிபார்ப்புக்காக பந்தலூர் காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. பந்தலூர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக என் மீது குற்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இது குறித்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.