சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3-வது நாளாக சோதனை நடந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்புடைய சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த ஏப்.7-ம் தேதி சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் 2-வது நாளாக நேற்று முன்தினமும் சோதனை நடந்தது.