சென்னை: அம்மன் தன் கனவில் வந்து சொன்னதால் மடிப்பிச்சை ஏந்தியதாக நடிகை நளினி தெரிவித்தார்.
தமிழில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நளினி. ‘உயிருள்ள வரை உஷா’, ‘தங்கைக்கோர் கீதம்’, ‘நூறாவது நாள்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது வரை பல்வேறு குணச்சித்திர வேடங்களில் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார்.