சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் நடத்தும் தொடர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அயோத்தி குப்பம் பகுதியில், திமுகவினர், மாற்றுக் கட்சியினரை தொடர்ந்து மிரட்டி தாக்குதல் நடத்துபவர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் நடத்தும் தொடர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அயோத்தி குப்பம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடந்தது.