அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு வழங்கிய நிலத்தை திரும்பப் பெற வேண்டும் என உ.பி. முதல்வருக்கு பாஜக மூத்த தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதேநேரம், அயோத்தியில் வேறு இடத்தில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டது.