தூத்துக்குடி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்த ஏதேதோ செய்கிறார் என அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வைத்து இன்று (பிப்.21) நடைபெற்றது. இதில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசியது: ''தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்து வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் இப்போட்டிகளை நடத்துகிறது.