புதுடெல்லி: அரசியல் கட்சிகளுடனான தேர்தல் ஆணையத்தின் மிகப் பெரிய முன்னெடுப்பாக மார்ச் 31 நிலவரப்படி மொத்தம் 4,719 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் அரசியல் கட்சிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி மட்டத்தில் இந்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகின்றன.