சென்னை : அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்படாததால் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குக சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும் பெருந்தொகை இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளதால் இதற்கு தீர்வு காண தலைமை வழக்கறிஞர் உதவ வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ராணிப்பேட்டையில் BHEl நிறுவன ஆலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட பட்டா நிலத்துக்கு இழப்பீடு வழங்க கோரி சேட்டு, சந்திரசேகர் ஆகியோர் 2017-ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கௌ தொடர்ந்திருந்தனர். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு ரூ.1,521 கோடியே 83 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாக பதிவுத்துறை தரப்பில் அறிக்கை சர்பிக்கப்பட்டுள்ளது.
The post அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்படாததால் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குக: ஐகோர்ட் appeared first on Dinakaran.