சத்தியமங்கலம்: அரசு டவுன் பஸ்சில் மகளிரிடம் கட்டணம் வசூலித்த கண்டக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து பண்ணாரி அம்மன் கோயிலுக்கு நேற்று சென்ற பி1 டவுன் பஸ்சில் கண்டக்டர் தரணிதரன் சிறப்பு பஸ் எனக்கூறி மளிரிடம் கட்டணம் வசூலித்தார். இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர் கட்டணத்தை திருப்பி கொடுத்தார்.
அதன் வீடியோ வைரலானது. இது குறித்து சத்தி கிளை மேலாளர் கூறுகையில், ‘‘பண்ணாரி செல்லும் பி1 அரசு டவுன் பஸ்சில் பெண் பயணிகளிடம் டிக்கெட் பணம் வசூல் செய்ததாக பயணிகள் சிலர் என்னிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தற்காலிக கண்டக்டர் தரணிதரன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.
The post அரசு டவுன் பஸ்சில் மகளிரிடம் கட்டணம் வசூலித்த கண்டக்டர் ‘டிஸ்மிஸ்’ appeared first on Dinakaran.