புதுடெல்லி: டெல்லியில் விளம்பரப் பலகை வைக்க அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் நீதித்துறை மாஜிஸ்ட்ரேட் நேஹா மிட்டல் முன்பு டெல்லி போலீஸ் தாக்கல் செய்த அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.