சென்னை: ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்து தமிழகம் திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு நல்கப்பட்டது. அப்போது அவர், ”அரசு மரியாதைக்கும், மக்களின் அன்புக்கும் நன்றி” என நெகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜா, தனது முதல் சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றம் செய்தார். அங்குள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். உலகின் மிகச் சிறந்த ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து அவர் அதை அரங்கேற்றினார்.