புதுச்சேரி: ரேஷன் கடைகள் திறந்தும் புதுச்சேரியில் அரிசி தரப்படாததால் அக்டோபர், நவம்பர் மாத அரிசிக்கு பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ.32.7 கோடி செலவானதாக குடிமைப் பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரேஷனில் டிசம்பர் மாத இலவச அரிசியை பத்து நாட்களில் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு 515 ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆட்சியாளர்களுக்கும் ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பயனாளிகளுக்கு அரிசிக்கு பதில் நேரடியாக பணம் வங்கி கணக்கில் வழங்கப்பட்டது. இதனால் ரேஷன்கடைகள் மூடப்பட்டது. மஞ்சள் கார்டுக்கு 10 கிலோ அரிசிக்கு பதிலாக ரூ.300, சிகப்பு கார்டுக்கு 20 கிலோ அரிசிக்கு பதிலாக ரூ.600 வங்கியில் செலுத்தப்பட்டது.