சென்னை: அரும்பாக்கம் ஜானகிராமன் காலனியில் குடியிருப்பு கட்டிடத்தை ஒட்டி சாலையில் பாலவிநாயகர் கோயில் நிறுவப்பட்டுள்ளது. இக்கோயில் அருகில் உள்ள வீடு ஒன்றில் விலங்குகள் நல ஆர்வலர், நாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார். இந்த நாய்கள், அசைவ உணவை உண்டுவிட்டு, எலும்புகளை விநாயகர் கோயிலில் போட்டு அசுத்தம் செய்வதாக புகார் எழுந்தது.
எனவே, நாய்களுக்கு இப்பகுதியில் உணவளிப்பதை தவிர்க்குமாறு பக்தர்கள் சார்பில் விலங்குகள் நல ஆர்வலரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விநாயகர் கோயில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகவும், அதை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலரின் உறவினர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.