
அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். ’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள இப்படத்தில் மம்தா மோகன்தாஸ் அருள்நிதிக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் நடித்துள்ள ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை படப்பிடிப்புக்கு இடையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

