லிவர்பூல்: நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 80+ கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்தியாவின் நுபுர் ஷியோரன். இது இந்த தொடரில் இந்தியாவுக்கான முதல் பதக்கமாக அமைந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி ஆட்டத்தில் 26 வயதான நுபுர், உஸ்பெகிஸ்தானின் ஓல்டினாய் சோடிம்போவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். 80+ கிலோ எடைப்பிரிவு ஒலிம்பிக்கில் இல்லாத நிலையில் நேரடியாக காலிறுதியில் நுபுர் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.