ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று கராச்சியில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 37, ஜோப்ரா ஆர்ச்சர் 25, பென் டக்கெட் 24, கேப்டன் ஜாஸ் பட்லர் 21, ஹாரி புரூக் 19, ஜேமி ஓவர்டன் 11 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் மார்கோ யான்சன், வியான் முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். கேசவ் மகாராஜ் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி குறைந்தது 207 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாமல் மட்டுமே இதே பிரிவில் 3 புள்ளிகளுடன் உள்ள ஆப்கானிஸ்தான் அணி நிகர ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி இலக்கை துரத்துவதற்கு முன்னதாகவே அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.