ராவல்பிண்டி: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் வங்கதேச அணியை 5 விக்கெட்டுகளில் வென்றது நியூஸிலாந்து. இதன் மூலம் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.
கடந்த 19-ம் தேதி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் குரூப் – ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் குரூப் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளன. இதே பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.