நாமக்கல்: “அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. விருதை என் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என அர்ஜுனா விருதுக்கு தேர்வான நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியும், பேட்மின்டன் வீராங்கனையுமான துளசிமதி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேட்மின்டன் வீராங்கணை எம்.துளசிமதி. இவர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரியில் கால்நடை மருத்துவம் (பிவிஎஸ்சி) 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவருக்கு இந்திய அரசின் விளையாட்டுத் துறை உரிய விருதான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.