பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இந்த ஆட்டம் 77-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. கால் இறுதி போட்டி இரண்டு கட்டமாக நடைபெறும். இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு முறை பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
நார்வே வீரரான மேக்னஸ் கார்ல்சன் தனது கால் இறுதி சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை தோற்கடித்தார். ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் மோதிய ஆட்டமும் அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருனா, பிரான்ஸின் மேக்சிம் வச்சியர்-லாக்ரேவ் மோதிய ஆட்டங்களும் டிராவில் முடிந்தன.