கோவை: கோவை மாநகர போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் சமூக வலைதளம் பக்கங்களில் சட்ட விரோத கருத்துக்களை பதிவிடுபவர்களையும், அவதூறு பரப்புபவர்கள், மோதலை தூண்டும் விதமாக பதிவிடுபவர்களையும் கண்காணித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல நேற்று முன்தினம் செல்வபுரம் போலீஸ் எஸ்ஐ தினேஷ்பாபு சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்து கொண்டு இருந்தார்.
அப்போது, எக்ஸ் பக்கத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மதம் சார்ந்த கருத்துக்களை, இரு மதத்தினரிடையே மோதலை உருவாக்கும் விதத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த எஸ்ஐ தினேஷ்பாபு இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அர்ஜூன் சம்பத் மீது கலவரத்தை ஏற்படுத்துதல், தவறான தகவலை பரப்புதல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அர்ஜூன் சம்பத் மீது போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.