சென்னை: அறிவுச் சாட்டையைச் சுழற்றி பேதங்களின் எலும்புகளை நொறுக்கிய மாமேதை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு கல்வி – ஒற்றுமை – போராட்டமுமே நிரந்தவழி என முழங்கியவர். அறிவுச் சாட்டையைச் சுழற்றி பேதங்களின் எலும்புகளை நொறுக்கிய மாமேதை.
இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று!இந்நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தவர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். கல்வியை குலைத்து, மாணவர்கள் மத்தியில் பிற்போக்குத்தனத்தை நிலைநிறுத்தும் கனவுலகில் மிதந்தவர்களுக்கு அண்ணல் இயற்றிய சட்டத்தின் வழியில் பல்கலைக்கழகங்களை காத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
அண்ணலின் கருத்துகள் கற்றறிவதற்கு மட்டுமல்ல, காலச் சூழலுக்கு ஏற்ப களத்தில் செயல்படுத்தி வெற்றியடைவதும் முக்கியம். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைப்பதே நமது இறுதி இலக்கு. அதற்கு அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
The post அறிவுச் சாட்டையைச் சுழற்றி பேதங்களின் எலும்புகளை நொறுக்கிய மாமேதை: உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.