சென்னை: தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்)-2, தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்)-2, மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்)-3 அலுவலக கட்டிடம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சென்னை- 600108, குறளகம் 3வது தளத்தில் இயங்கி வரும் தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்)-2, தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்)-2 மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்)-3, ஆகிய 3 அலுவலகங்களும், “Wavoo Mansion” 48/39, 7வது தளம், இராஜாஜி சாலை, சென்னை-600 001 என்ற முகவரிக்கு 1ம் தேதி(நேற்று) முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது. இவ்வலுவலகம் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது என்பதால் இனிவரும் காலங்களில் மேற்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்)-2 தெரிவித்துள்ளார்.
The post அலுவலக கட்டிடம் இடமாற்றம் appeared first on Dinakaran.