ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடலின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (டிச.22) ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள அல்லு அர்ஜுன் வீட்டின் மீது சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை படைத்துள்ளது.