மதுரை: மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அவனியாபுரம், பலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடங்குகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் ஜன,14 -ம் தேதியிலும், பாலமேட்டில் ஜன.,15-ம் தேதியிலும், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜன.,16-ம் தேதியிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கான முன் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் செய்கின்றனர். 3 ஜல்லிக்கட்டுகளிலும் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.