2026ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் பட்டியலை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்குப் பிறகு புதிய அவெஞ்சர்களை உருவாக்கும் முயற்சியில் மார்வெல் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. சில வெற்றிகள் பல சொதப்பல்கள் என சென்று கொண்டிருக்கும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் அடுத்து ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ உள்ளிட்ட படங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. அயர்ன் மேனாக போய் தற்போது டாக்டர் டூம் என்ற பிரபல வில்லன் கதாபாத்திரமாக மீண்டும் மார்வெல் படங்களுக்குள் வருகிறார் ராபர்ட் டவுனி ஜூனியர்.